லாட்டரி விற்றவர் கைது
ஈரோடு, நவ.22: ஈரோடு சூரம்பட்டி பகுதியில் தனியார் மண்டபத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக தெற்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அந்த மண்டபத்துக்கு சென்று சோதனையிட்டனர்.
Advertisement
அப்போது, அங்கிருந்த பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்த நீஜாமுதீன் (33) என்பவர், வெள்ளை தாளில் கேரள மாநில லாட்டரி எண்களை எழுதி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த லாட்டரி எண்கள் எழுதப்பட்ட தாள்கள், பணம் ரூ.200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Advertisement