பவானிசாகர் அருகே மக்காசோள பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
சத்தியமங்கலம், நவ.21: கர்நாடக மாநிலம் கே.ஆர் நகர் பகுதியில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி உடுமலைப்பேட்டை செல்வதற்காக பவானிசாகர் அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியை பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் அன்புமணி (45) ஓட்டினார்.
Advertisement
இத்னைத்தொடர்ந்து அப்பகுதியில் சாலை வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் அன்புமணி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement