கஞ்சா, லாட்டரி, குட்கா, மது விற்ற 5 பேர் கைது
ஈரோடு, நவ.19: ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, குட்கா, சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பேரில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மதன்குமாரை (23), கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, மொடக்குறிச்சி அடுத்த கண்ணுதயம்பாளையத்தை சேர்ந்த சிவகுமார் (25), என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை அண்ணா சிலை அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த, அதேப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (60), என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவில் இருந்து ஆசனூர் வழியாக மதுபாட்டில் கடத்தி வந்த, சத்தியமங்கலம் ஈரங்காட்டூரை சேர்ந்த லோகநாதனை (40), கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். கொடுமுடி அடுத்த எலையூரில் மளிகை கடையில் குட்கா விற்ற, எமகந்தனூரைசேர்ந்த ராமகிருஷ்ணனை (42), கொடுமுடி போலீசார் கைது செய்தனர்.