டெட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி ஈரோட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, செப். 19: டெட் தேர்வில் விலக்கு அளிக்ககோரி ஈரோட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
Advertisement
சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரஞ்சித்குமார் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2011ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement