சைபர் கிரைமில் டிஐஜி ஆய்வு
ஈரோடு, அக். 18: ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன், ஏடிஎஸ்பி அலுவலகத்தில் கோவை சரக டிஐஜி சசிமோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், சைபர் கிரைமில் ஆன்லைன் பண மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அதில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Advertisement
இதுதவிர செல்போன் திருட்டு, மாயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள், அதில், மீட்கப்பட்ட செல்போன்கள் ஒப்படைத்த விவரம் போன்றவையும் கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி சுஜாதாவிடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, எஸ்பி சுஜாதா, ஏடிஎஸ்பி.க்கள் விவேகானந்தன், வேலுமணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Advertisement