பவானி நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுகள்
பவானி, அக். 17: பவானி நகர்மன்ற கூட்டம் தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் மணி, பொறியாளர் திலீபன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பல்வேறு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றுதல் தொடர்பான விவாதங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
தொடர்ந்து, ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வரும் கவுன்சிலர் பாரதிராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.முடிவில், நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள், காரம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. இதில், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
Advertisement