ஈரோடு பிஎப் அலுவலக அதிகாரியாக மண்டல ஆணையர் பொறுப்பேற்பு
ஈரோடு,அக்.16: ஈரோடு மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியாக மண்டல ஆணையர் கே.வி.சுதர்சன் ராவ் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சுதர்சன் ராவ் ஈரோடு மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டார். இவர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு சேவை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் சென்னை அம்பத்தூர்,திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார்.
‘சேவைகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதும்,சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு போன்ற சலுகைகளை எந்த தடையும் இல்லாமல் வழங்குவதும் இந்த அலுவலகத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்’ என ஆணையர் சுதர்சன் ராவ் கூறியுள்ளார். மாவட்ட எல்லைக்கு உட்பட்ட நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஏதேனும் பிஎப் பற்றிய விளக்கமோ அல்லது குறைகளோ இருந்தால் மாவட்ட பிஎப் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட அமலாக்க அதிகாரி சரவணகுமார் தெரிவித்துள்ளார்.