தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
சத்தியமங்கலம்,செப்.16: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முன்னதாக நகராட்சி அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு நகர செயலாளர் ஜானகிராமசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட அனைத்து பூத்துகளிலும் அண்ணாவின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சத்தியமங்கலம் தோப்பூர் பகுதியில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சிகளில் நகர துணை செயலாளர் நீலமலை கார்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் பவுஜில் ஹக்,முருகன், கோபி நகர செயலாளர் நாகராஜ்,டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், மாவட்ட சிறுபான்மை அணி சபியுல்லா, நகர் மன்ற துணைத் தலைவர் நடராஜ், வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள், கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.