வேம்பத்தி ஊராட்சியில் ரூ.2.98 கோடியில் உயர்மட்ட பாலம்
Advertisement
அந்தியூர்,அக்.13: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சி மாரி கவுண்டனூரில் உயர்மட்ட பாலம் அமைக்க மாநில மூலதன நிதியிலிருந்து ரூ.2 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், தெற்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இதில்,விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் விவேகம் பாலுசாமி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Advertisement