ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
ஈரோடு, அக். 11: ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். இதில், பென்சன் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். 8வது ஊதியக்குழு உறுப்பினர்களை உடனே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் பரமசிவம், குப்புசாமி மற்றும் ஓய்வூதியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement