கஞ்சா விற்றவர் கைது
Advertisement
ஈரோடு, அக். 11: ஈரோடு டவுன் போலீசார் நேற்று முன்தினம் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வளையக்கார வீதி, கம்பிப்பாலம் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் கோணவாய்க்கால், பழைய கரூர் ரோடு பகுதியை சேர்ந்த சரண் வர்மா (22), என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1,100 மதிப்பிலான 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Advertisement