ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் 180 போலீஸ் ஈரோட்டில் இருந்து அனுப்பி வைப்பு
ஈரோடு, செப். 10: ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்புக்கு ஈரோட்டில் இருந்து 180 போலீசார் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் நாளை (11ம் தேதி) அனுசரிக்கப்பட உள்ளது. இதில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
Advertisement
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் என 180 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள், 2 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 12ம் தேதி இரவு ஈரோடு திரும்புவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement