புகையிலை பொருள்கள் மது விற்ற 2 பேர் கைது
ஈரோடு, டிச. 8: ஈரோடு டவுன் போலீசார் நேற்று முன் வெங்கடாசலம் வீதி பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளரான ஈரோடு, ராமசாமி வீதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (45) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Advertisement
மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 345.53 கிராம் எடையிலான புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். ஈரோடு வ.உ.சி.பூங்கா பகுதியில் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஏ.பி.டி.ரோடு பகுதியை சேர்ந்த சகாதேவன் (40) என்பவரை டவுன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கைது செய்து, 26 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Advertisement