குழந்தைகளுடன் பெண் மாயம்
ஈரோடு, அக். 8: ஈரோடு பெரியவலசு ராதாகிருஷ்ணன் 2வது வீதியை சேர்ந்த ரங்கராஜ் மகன் சந்தோஷ்குமார் (30). மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா (26). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். அர்ச்சனா நேற்று முன்தினம் காலை மகள், மகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
Advertisement
இதையடுத்து அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசில் சந்தோஷ்குமார் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.
Advertisement