கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அக்.8: ஈரோடு சூரம்பட்டியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர் கோரிக்கைகளை வலிறுத்தி பேசினார். இதில், தஞ்சாவூர் சரக துணை பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Advertisement
கூட்டுறவுத்துறையில் அனைத்து பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்கும்போது கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு செய்து தரவேண்டும். 20 கோடிக்கு மேல் கடன் நிலுவை வைத்துள்ள பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்ளுக்கு மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Advertisement