பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, அக்.7: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் ஈரோடு மாவட்ட கூட்டமைப்பின் சார்பில், ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்கங்களின் மாநில அமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
இதில், தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளரின் ஆணவப் போக்கை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் மாவட்ட தலைவர் சம்பத்குமார், மாவட்ட செயலாளர் சரவணமூர்த்தி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவி தலைவர் கிட்டுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் நிர்வாகிகள் சதீஷ்குமார், அருண்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.