கர்நாடக மது கடத்தியவர்கள் கைது
ஈரோடு, ஆக. 7: ஈரோடு மாவட்டம், ஆசனூர் சோதனைசாவடியில் போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபர்கள் இருவரை தடுத்து சோதனையிட்டதில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள முட்டிநாடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (27), ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்பாபு (37) ஆகிய இருவரும் கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.