போலீஸ்காரர் படுகாயம்
ஈரோடு, ஆக. 6: ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை போலீசாக இருப்பவர் அருள்மணி (32). சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை 6.30 மணி அளவில் ஆணைக்கல்பாளையம் நால்ரோட்டில் டீ குடிக்க தனது பைக்கில் சென்றார். ஆயுதப்படை வளாகத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது சாலையின் குறுக்கே தெரு நாய் வந்தது.
நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் முன் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.