பவானி அருகே ஊராட்சிக்கோட்டை மலையை சுற்றிலும் 2 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு
பவானி, நவ. 1: பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை மலையைச் சுற்றிலும் 2,000 பனை விதைகள் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு 6 கோடி பனை விதை விதைக்கும் திட்டத்தை தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படுத்தி வருகிறது.
Advertisement
இதன் தொடர்ச்சியாக, தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் மேட்டூர் வலது கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பவானி, ஊராட்சிக்கோட்டை மலையைச் சுற்றிலும் அடிவாரத்தில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. சங்க நிர்வாகிகள் சுப்பு ஏ.முத்துசாமி, தனபால், பொன்னுசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
Advertisement