ரயிலில் பெண்கள் பெட்டியில் கிடந்த 2 கிலோ கஞ்சா
ஈரோடு அக். 1: ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் உள்ள கழிவறை அருகில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. போலீசார் அதனை கைப்பற்றி விசாரித்ததில் அந்த பை யார் கொண்டு வந்தது என தெரியவில்லை.
Advertisement
அதனை சோதனையிட்டதில், 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Advertisement