உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
பவானி: பவானி ஊராட்சி ஒன்றியம், பருவாச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. பவானி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் அன்பழகன் வரவேற்றார்.
Advertisement
முகாமில், சாதி, இருப்பிடம், பட்டா மாற்றம், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தல், ரேஷன் அட்டையில் பெயர், முகவரி திருத்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக அளித்தனர். பவானி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.ஏ.சேகர், திமுக மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தண்டபாணி, ஊராட்சி செயலாளர்கள் தேவராஜ், மாரிமுத்து மற்றும் அனைத்து துறை சார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement