மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
ஈரோடு, ஜூலை 31: பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் டி.என்.பாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் ராம் (23). தொழிலாளி. இவர் கோபியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் ராம், சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன்மூலம் சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்பேரில், சிறுமியிடம் விசாரணை நடத்தி, ராம் மீது போலீசார் நேற்று முன்தினம் போக்சோ வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.