ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு தொடக்க விழா
ஈரோடு, ஜூலை 30: ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு மற்றும் இளைஞர் சக்தி இயக்கம் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை உரையில் முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்புவிடம் தான் பணியாற்றிய காலத்தை நினைவு கூர்ந்தார். முன்னாள் அரசுத் தலைமை செயலாளர் வெ.இறையன்பு யுபிஎஸ்சி பயிற்சி வகுப்புகளையும் இளைஞர் சக்தி இயக்கத்தையும் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இறுதியாக, சுயநிதிப்பிரிவின் தமிழ்த்துறைத்தலைவர் செந்தாமரை நன்றியுரை கூறினார். விழாவில் செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். தி முதலியார் எஜிகேசனல் டிரஸ்டின் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் பொருளாதாரத்துறையின் ஓய்வுபெற்ற துறைத்தலைவர் மணி வாழ்த்துரை வழங்கினர். இயக்குநர் வெங்கடாசலம் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.