பெருந்துறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஈரோடு, ஜூலை 26: ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவாச்சி ஊராட்சியில் வாவிக்கடை பைபாஸ் சாலையில் உள்ள மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்று, முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறதா? என பார்வையிட்டார். தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற மக்களுக்கு திமுக பொறுப்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திமுக பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, திருவாச்சி ஊராட்சி முன்னாள் தலைவர் சோளி பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.