லிப்ட்டில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு
ஈரோடு, ஜூலை 24: ஈரோடு அரசு மருத்துவமனையில் பல்நோக்கு மருத்துவபிரிவு உள்ளது. இங்குள்ள லிப்ட்டில் குமாரபாளையத்தை சேர்ந்த பழனியம்மாள் (49), பொன்னுசாமி (59), பவானி, மாயபுரத்தை சேர்ந்த கோபி (28), ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 2வது தளத்துக்கு சென்றனர்.அப்போது இடையில் திடீரென லிப்ட் நின்றுவிட்டது.
இதனால், லிப்ட்டில் இருந்தவர்கல் பீதியில் சத்தம் போட்டனர். தொடர்ந்து, லிப்ட்டை இயக்க முயற்சித்தும் முடியவில்லை. இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.ஆனால், தீயணைப்பு துறையினர் மருத்துவமனைக்கு செல்வதற்குள், லிப்ட் ஆபரேட்டர் மற்றும் பொதுமக்கள் இணைந்து லிப்ட்டை மீண்டும் இயக்கச் செய்து, லிப்ட்டுக்குள் சிக்கிய 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனால், அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.