செவ்வாழை விலை குறைந்தது
கோபி, அக். 29: கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாழை விலை கணிசமாக குறைந்தது.
வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் செவ்வாழை தார் ஒன்று ரூ.190 முதல் 810 வரை விலை போனது.
தேன்வாழை தார் ரூ.160 முதல் 500 வரையிலும், பூவன் ரக வாழை தார் ரூ.160 ரூபாய் முதல் 480 வரையிலும், ரஸ்தாளி ரக வாழை தார் ரூ.170 முதல் 590 வரையிலும், மொந்தன் ரக வாழை ரூ.110 முதல் 230 வரையிலும், ரொபஸ்டோ ரக வாழை ரூ.120 முதல் 330 வரையிலும், பச்சை நாடன் ரக வாழை ரூ.160 முதல் 460 வரையிலும் விலை போனது.
அதேபோன்று கதளி ரக வாழை ஒரு கிலோ 19 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலும், நேந்திரன் ரக வாழை 19 ரூபாய் முதல் 34 ரூபாய் வரையிலும் விலை போனது. மொத்தம் 6,565 வாழைத்தார் வரத்து இருந்த நிலையில் 10,54,000 ரூபாய்க்கு விலை போனது. கடந்த சில வாரங்களுக்கு முன் வரை செவ்வாழை தார் ஒன்று 1,100 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது 810 ரூபாயாக குறைந்து உள்ளது.