அந்தியூர் அருகே 156 பண்டல் குட்கா, வேன் பறிமுதல்
அந்தியூர், நவ. 28: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் காளிப்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பட்லூர் நால்ரோட்டில் இருந்து வந்த ஒரு ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களான ஹான்ஸ் 47 பண்டல், விமல் பாக்கு 52 பண்டல், விஐ புகையிலை 52 பண்டல், கூலிப் 5 பண்டல் பதுக்கி எடுத்து வந்தது தெரியவந்தது.
இவைகளைப் பறிமுதல் செய்த மாவோயிஸ்ட் போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். வேனில் வந்த காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (50), வேன் டிரைவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரையும் வெள்ளித்திருப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவானி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.