தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்டத்தில் ரூ.605.44 கோடியில் புதிய திட்டங்கள்

ஈரோடு, நவ. 27: ஈரோடு மாவட்டத்தில் ரூ.605.44 கோடியில் புதிய திட்டங்களை துவக்கிவைத்து, 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் நேற்று நடந்த அரசு விழாவில், ரூ.235 கோடியே 73 லட்சம் செலவிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தார். பின்னர், ரூ.91 கோடியே 09 லட்சம் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகளின் சார்பில் 1,84,491 பயனாளிகளுக்கு ரூ.278 கோடியே 62 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திறந்து வைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள்:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சோலார் பகுதியில் ரூ.74 கோடியே 90 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம், மோளகவுண்டம்பாளையம் நடுநிலைபள்ளி, ரயில்வே காலனி மேல்நிலை பள்ளிகளில் ரூ.1 கோடியே 13 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ரூ.3 கோடியே 60 லட்சம் செலவில் 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள், ரூ.36 லட்சம் செலவில் ஒன்பது மீட்டர் உயரம் கொண்ட சிறிய கோபுர மின் விளக்குகள், ரூ.21 லட்சத்து 25 ஆயிரம் செலவில் சாமுண்டி நகர் பகுதியில் நியாயவிலை கடை மற்றும் ரயில்வே காலனி அரசு மேல்நிலை பள்ளிக்கான மேசை மற்றும் நாற்காலிகள்.

லக்கம்பட்டி, அத்தாணி ஆகிய பேரூராட்சிகளில் ரூ.1 கோடி செலவில் சமுதாய கூடங்கள், நம்பியூர், ஆப்பக்கூடல், கொல்லன்கோவில், சிவகிரி ஆகிய பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளில் ரூ.3 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் செலவில் வகுப்பறை கட்டிடங்கள், ரூ.3 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளில் 9 மீட்டர் உயரம் கொண்ட சிறிய கோபுர மின் விளக்குகள், 3 பேரூராட்சிகளில் 12 மீட்டர் உயரம் கொண்ட உயர் கோபுர மின்விளக்குகள், நியாய விலை கடைகள் மற்றும் குடிநீர் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள்.

ரூ.1 கோடியே 1 லட்சம் செலவில் தாளவாடியில் வட்டார பொது சுகாதார மையம் மற்றும் காசியூரில் துணை சுகாதார நிலையம், கலிங்கியம், சிறுவலூர், கொண்டையம் பாளையம், தலமலை, அரேபாளையம், கேர்மாளம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 72 ஆயிரம் செலவில் 6 கிராம ஊராட்சி அலுவலகத்துடன்கூடிய பொதுசேவை மைய கட்டிடங்கள், மொடக்குறிச்சி வட்டாரம்-நஞ்சை காளமங்கலம், மன்னாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.7 லட்சத்து 88 ஆயிரம் செலவில் புதிய இருப்பறையுடன்கூடிய சமையல் அறை, மொடக்குறிச்சி வட்டாரம்-ஆனந்தம்பாளையம், காகம், புஞ்சை காளமங்கலம், துய்யம்பூந்துறை ஆகிய இடங்களில் ரூ.24 லட்சத்து 39 ஆயிரம் செலவில் 4 பொது சுகாதார வளாகங்கள்.

ரூ.69 லட்சத்து 29 ஆயிரம் செலவில் ஒரிச்சேரிபுதூர், பெரியபுலியூர் ஆகிய இடங்களில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் கருந்தேவன்பாளையத்தில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு, ஈரோடு மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் ரூ.19 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 618 வீடுகள் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 80 ஆயிரம் செலவில் மறுசீரமைக்கப்பட்ட 7 வீடுகள். நெடுஞ்சாலை துறை சார்பில், சத்தி-அத்தாணி-பவானி சாலை முதல் தாசரிபாளையம் சாலை வரையில் ரூ.7 கோடி செலவில் உயர்மட்ட பாலம். வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில், பவானியில் ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் வணிவரித்துறை அலுவலக கட்டடம்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில், மொடக்குறிச்சி, ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லானுக்கு ரூ.4 கோடியே 90 லட்சம் செலவில் திருவுருவச்சிலையுடன் கூடிய அரங்கம், ஈரோடு பால்பண்ணை வளாகத்தில் உள்ள பூங்காவில் தமிழ்நாட்டில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட பால்வள தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு ரூ.50 லட்சம் செலவில் திருவுருவச்சிலை.

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19,500 பயனாளிகளுக்கு பட்டாக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 44,305 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி மேம்பாட்டு திட்டம், நுண்ணீர்பாசன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்.

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 253 பயனாளிகளுக்கு பண்ணை குட்டைகள் அமைத்தல், முதலமைச்சரின் சூரியசக்தி மின்மோட்டார் மற்றும் பழைய மின்மோட்டார்களை மாற்றி மானியத்தில் புதிய மின்மோட்டார்களை வழங்குதல், திறந்தவெளி பாசன கிணறுகளை புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 96,050 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய மூங்கில் இயக்கம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய வேளாண் வளாச்சித் திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம், ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1,566 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவித்தொகை, காதொலிக் கருவி, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், பிரெய்லி கைக்கடிகாரங்கள், ஒளிரும் மடக்கு குச்சிகள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் போன்ற பல்வேறு உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 120 பயனாளிகளுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 625 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் கட்டுமான திட்டத்தின் கீழ் வீடுகள், தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 7,020 பயனாளிகளுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் அடையாள அட்டைகள் வழங்குதல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 449 பயனாளிகளுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கலைஞர் கைவினை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள்.

என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,84,491 பயனாளிகளுக்கு ரூ.278 கோடியே 62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

நடமாடும் மருத்துவக் குழு

ஈரோடு அரசு விழாவில் பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், மேல்சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Related News