திராவிட மாடல் ஆட்சியில் அளப்பரிய சாதனைகள் முன்னாள் எம்பி அறிக்கை
பவானி, நவ. 26: முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வரிசையில், இன்று வளர்ந்து நிற்கும் உத்தமத் தலைவராக திராவிடம் காக்க வந்த திருவிளக்காக, தியாகத் திருவுருவாக, கண் தூங்கா களப்பணி ஆற்றி வருகிறார் நம் முதல்வர். திராவிட மாடல் ஆட்சியில்தான் எத்தனை சாதனைகள். அத்தனையும் அளப்பரிய சாதனைகள். அளவுகோல் இல்லாத முத்தான சாதனைகள்.அந்தத் தலைவரின் வருகை இன்று, பெரியார் பிறந்த மண்ணிற்கு பெருமை. எழுச்சி மிகுந்த தலைமைக்கு ஏற்ற தளபதியாக, எத்தனை கணைகள், எவர் தொடுப்பினும், புன்சிரிப்பு சிந்தி, அதை தவிடு பொடியாக்கிடும் வலிமை, வனப்பு மற்றும் வசீகரம் கொண்ட நெஞ்சம் மிக்க ஆளுமை.
நவம்பர் 27 பிறந்தநாள் காணும் நமது உள்ளத்தை கொள்ளை கொண்ட கொள்கை தலைவர் துணை முதல்வரையும் வாழ்த்தி மகிழ்வோம் என தெரிவித்துள்ளார்.