ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Advertisement
ஈரோடு, செப்.22: ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் குறித்தான பயிற்சி வார நாட்களில் 17 நாட்களும், வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) 17 நாட்களும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இன்று (22ம் தேதி) முதல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். இப்பயிற்சிக்கான காலம் 2 மாதம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 15 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சிக் கட்டணம் ரூ.4,550 செலுத்த வேண்டும்.
Advertisement