ஈரோடு ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் பிசினஸ் டெவலப்மெண்ட் கூட்டம்
12:41 AM Aug 12, 2025 IST
ஈரோடு, ஆக 12: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ஈரோடு கிளை நிறுவனத்தின் சார்பில் பிசினஸ் டெவலப்மெண்ட் மீட்-2025 நேற்று நடைபெற்றது. இதில் சேலம் மண்டல மேலாளர் என். தாமோதரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ஈரோடு கிளை மேலாளர் எஸ்.யோகேஸ்வரன் வரவேற்றார். இதில் டிஎஸ்ஏ, பில்டர்கள், ப்ரோமோட்டர்கள், ஆடிட்டர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.