திமுக சார்பில் வேலைவாய்ப்பு முகாம்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி தொடங்கி வைத்தார்
கோபி,டிச.6: கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், டி.என்.பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் கொங்கர்பாளையம் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திமுக கல்வியாளர் அணி செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘‘என்றைக்கு நாம் பகுத்தறிவோடு நமது சமுதாயத்திற்கு சரியாக வழிநடத்தக்கூடிய தலைவர் என்று அறிந்து அவரோடு கரம் கோர்த்து பகுத்தறிவு சுயமரியாதை மிக்க பூமியாக மாற்றுகின்றோமோ அன்றைக்குத்தான் நாம் உண்மையாக பிறக்கின்றோம் என்றார்.