மிலாடி நபியையொட்டி 5ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
ஈரோடு, செப்.3: ஈரோடு மாவட்டத்தில் மிலாடி நபியையொட்டி 5ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மிலாடி நபியையொட்டி வருகிற 5ம் தேதி அரசு டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள், எப்எல்2 மற்றும் எப்எல்3 மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் அன்றைய தினம் மூடப்படவேண்டும் எனவும், அன்றைய தினத்தில் ‘மது விற்பனை இல்லாத நாளாக’ அனுசரிக்க வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. இதனை மீறி மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement