அரசு பணியாளர்களுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கம்
ஈரோடு,செப்.3: ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தொடங்கி வைத்தார். இதில் ஆட்சி மொழி வரலாறு மற்றும் சட்டம் குறித்து முனைவர் மோகனாம்பிகாவும், மொழிபெயர்ப்பும், கலைச் சொல்லாக்கமும் குறித்து முனைவர் மணிவண்ணனும், அலுவலக குறிப்பு வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் குறித்து புகழேந்தியும், ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணைகள் குறித்து முனைவர் இளங்கோவனும் கருத்துரையாற்றி பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து இப்பயிலரங்கம் 2வது நாளாக இன்றும் (3ம் தேதி) நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ஜோதி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.