மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 230 மனுக்கள்
ஈரோடு, டிச. 2: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ச.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித் தொகைகள் கேட்டும், வீட்டுமனை பட்டா, கல்விக்கடன், அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 230 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ச.கந்தசாமி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் 18 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி, கலெக்டர் கந்தசாமி பாராட்டினார்.