தனியார் கம்பெனியில் பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி ஊழியர் படுகாயம்
Advertisement
புதுச்சேரி, ஜூலை 14: புதுச்சேரி கூடப்பாக்கம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (29). இவர் பத்துக்கண்ணு பகுதியில் உள்ள தனியார் ஜெனரேட்டர் கம்பெனியில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்யும் போது அவரது கைவிரல் மிஷினில் சிக்கிக்கொண்டது. உடனே அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கையின் 3 விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சிகிச்சை அளித்தனர். பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஐயப்பன் தனக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் வேலை வழங்கியதாக கம்பெனி சூப்பர்வைசர் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சூப்பர்வைசர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement