மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சேலம், மே 14: சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று (14ம் தேதி) காலை 11 மணிக்கு சேலம் உடையாப்பட்டி காமராஜர் நகர் காலனியில் உள்ள சேலம் கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் திருநாவுகரசு கலந்துகொண்டு, குறைகளை கேட்டறிகிறார். அதனால், சேலம் கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் வந்திருந்து, மின்சாரம் தொடர்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இத்தகவலை சேலம் கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement