மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் அவிநாசியில் நாளை நடக்கிறது
அவிநாசி, மார்ச்11: தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை(12ம் தேதி) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர்(கூடுதல் பொறுப்பு) விஜய ஈசுவரன் கலந்து கொண்டு மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்கிறார். இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இந்த தகவலை, மின் வாரிய அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement