தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஷொர்ணூர் - நிலம்பூர் ரோடு இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

பாலக்காடு, ஏப். 5: தென்னக ரயில்வே பாலக்காடு மண்டல நிர்வாகத்திற்கு உட்பட்ட ஷொர்ணூர் - நிலம்பூர் ரோடு இடையே மின்சார ரயில் இணைப்பு பணிகள் முழுமை அடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.  கேரளா மாநிலம், ஷொர்ணூர் முதல் நிலம்பூர் ரோடு ரயில் நிலையம் வரையில் 65.12 கிமீ பிராட் கேஜ் தண்டவாளத்தில் மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டது. தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) ஏ.கே.சித்தார்த்தா, திட்ட தலைமை இயக்குநர் ஷமீர் டிக், மண்டல ரயில்வே துணை மேலாளர் ஜெயகிருஷ்ணன், சந்தீப் ஜோசப், ஆகியோர் மின் இணைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

Advertisement

ரூ.70 கோடி செலவில் இந்த மின் இணைப்பு திட்டப்பணிகள் நடைபெற்றது. மேலாற்றூரில் இதற்காக சப்-ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஷொர்ணூர் - நிலம்பூர் - ஷொர்ணூர் இடையே பாசன்ஜர் ரயில் சேவை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து விரைவில் இந்த வழித்தடத்தில் மெமு ரயில் சேவையும் துவங்கப்படும் என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர். இயற்கை சூழ்ந்த காட்டின் நடுவே ஷொர்ணூர் சந்திப்பு, நிலம்பூர் ரோடு தண்டவாளம் அமைந்துள்ளது. ஷொர்ணூரிலிருந்து அங்காடிப்புரம், திரூர் வழியாக நிலம்பூர் சென்று திரும்ப இதே வழித்தடத்தில் மறு மார்க்கமாக ரயில் சேவை நடைபெறும் என ரயில்வேதுறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement