மது பதுக்கி விற்ற முதியவர் கைது
பரமத்திவேலூர், ஜூலை 8: பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அண்ணா நகர் பகுதியில், ஒரு ஓட்டலுக்கு அருகில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, பரமத்திவேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், அண்ணாநகர் பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது, அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த, சானார்பாளையம் பகுதியை சேர்ந்த குப்புசாமி(67) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 26மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.