2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 21 வாலிபர்கள் பிடிபட்டனர்
Advertisement
குறிப்பாக தண்டையார்பேட்டை காவல் எல்லையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக கார்கில் நகரை சேர்ந்த கார்த்திக் (எ) புறா கார்த்திக் (25), வள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் கரீம் (25), செங்குன்றம் கோமதி அம்மன் நகரை சேர்ந்த ஜோசப் (எ) தினேஷ் (27) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், தி.நகர் நடேசன் பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த செங்குன்றம் ஆதாம் தெருவை சேர்ந்த சுப்பிரமணி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement