களம்பூர் அருகே போதை பொருள் பதுக்கி விற்றவர் கைது
Advertisement
ஆரணி, மே 28: களம்பூர் அடுத்த திருமலை, வடமாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பங்க் கடைகளில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப் பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக களம்பூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், களம்பூர் போலீஸ் எஸ்ஐ ஷாபுதீன் மற்றும் போலீசார் திருமலை கிராமத்தில் உள்ள பங்க்கடையில் சோதனை செய்தனர்.
அப்போது, கடையில் போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த சரவணன்(35), என தெரியவந்தது உடனே, கடையில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து, சரவணனை கைதுசெய்து, ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Advertisement