விபத்தில் டிரைவர் பலி
Advertisement
திருப்புத்தூர், ஜூலை 25: திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகம் மகன் திருநாவுக்கரசு(40). டிரைவர். இவர் நேற்று அதிகாலை திருப்புத்தூரில் இருந்து கண்டவராயன்பட்டிக்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது பெரியகண்மாய் கழுங்கு வளைவு பகுதியில் சென்றபோது டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரோட்டோரத்தில் இருந்த வேப்பமரத்தில் திருநாவுக்கரசு தலை மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பலியானார்.இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருநாவுக்கரசின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து திருப்புத்தூர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிராணவின் டேனி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Advertisement