தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வானூர் அருகே டயர் பஞ்சராகி நின்ற டிப்பர் லாரி மீது டேங்கர் லாரி மோதி டிரைவர் பலி

வானூர், செப். 6: மேம்பாலத்தில் டயர் பஞ்சராகி நின்ற டிப்பர் லாரி மீது பெட்ரோல் டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிளீனர் படுகாயம் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா தென்கோடிப்பாக்கம் கிராமத்தில் புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு டிப்பர் லாரி ஒன்று திடீரென பஞ்சரானதால் சாலையோரம் நிறுத்தி, பழுதை சரி செய்தனர். அப்போது, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக அந்த டிப்பர் லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரியின் முன்பக்கம் நொறுங்கி, பலத்த காயமடைந்த லாரி டிரைவர், கிளீனர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. மேலும் விபத்தில் சிக்கியது பெட்ரோல் டேங்கர் லாரி என்பதால் தீப்பிடித்துவிடுமோ என மக்கள் லாரியின் அருகில் செல்லவே அச்சமடைந்தனர்.

Advertisement

தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கிய லாரி டிரைவர், கிளீனர் ஆகியோரை போராடி மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் (40), அருங்குணம் பகுதியை சேர்ந்த கிளீனர் புஷ்பராஜ் என்பது தெரியவந்தது. இந்த விபத்தால், திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜிப்மரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லாரி டிரைவர் பிரகாஷ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கிளீனர் புஷ்பராஜூக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News