டிப்பர் லாரியில் கற்கள் கடத்திய டிரைவர் கைது
கிருஷ்ணகிரி, ஜூன் 6: கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை எஸ்எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் போலீசார், சாமிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வேலி கற்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை கற்களுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த லாரியின் உரிமையாளரும், டிரைவருமான அதேபகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement