கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி
Advertisement
கோவை, மே 22: கோவையில் நேற்று மதியம் முதல் இரவு வரை பல்வெறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில் கோவை அவிநாசி மேம்பாலம் கீழ் பகுதி, லங்கா கார்னர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணிகளில் கோவை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். இப்பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மழை நீரை முழுமையாக வெளியேற்றிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில், உதவி பொறியாளர்கள் விமல்ராஜ், சதீஷ்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Advertisement