திமுக தெருமுனை பிரசார பொதுக்கூட்டம்
இடைப்பாடி, ஜூலை 9: சேலம் மேற்கு மாவட்டம், கொங்கணாபுரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார பொதுக்கூட்டம், கோனசமுத்திரம் ஊராட்சி கன்னியாம்பட்டியில் நடந்தது. கொங்கணாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் டாட்டா தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார். திமுக மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட துணை அமைப்பாளர் பிரபுகண்ணன், சௌந்தரராஜன், ராஜவேலு, மயிலு, அண்ணாதுரை, பழனிச்சாமி, சுமதி கந்தசாமி, பிர்லா, மெடிக்கல் குமார், பிரசாத், உதயகுமார், மோகன், பிரசாந்த், அன்புராஜ் சதீஷ், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் முருகவேல், தலைமை கழக பேச்சாளர்கள் கோனூர் வைரமணி, திவ்யா ஆகியோர் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை பற்றி சிறப்புரையாற்றினர். இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.