தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவள்ளூர் மாவட்டத்தில் `ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரம்

திருவள்ளூர், ஜூலை 5: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பை தொடங்கி வைத்தார். அதன்படி கடம்பத்தூர் ஒன்றியம், கொப்பூர் கிராமத்தில் `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் க.திராவிடபக்தன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி கொப்பூர் திலீப்குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகிகள் குமரன், செங்குட்டுவன், மோகன சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு வீடு, வீடாகச் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிக்கூறி, தீவிரமாக உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த `ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார இயக்கம் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணை தலைவருமான மீ.வே.கருணாகரன் தலைமையில், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் தனியார் மகாலில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம், மாதவரம் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் அருண் ஆகியோர் கலந்துகொண்டு வீடு வீடாக சென்று திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலப் பணிகளையும், சாதனை திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து, திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்வின்போது, சோழவரம் தெற்கு ஒன்றிய மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருத்தணி கே.கே.நகர் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமையில், நகர செயலாளர் வி.வினோத்குமார் முன்னிலையில், நேற்று திமுகவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி மக்களுடன் முதல்வர் செயலி மூலம் புதிய உறுப்பினர்களை சேர்த்தனர். இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி ம.கிரண், நகர துணை செயலாளர் ஜி.எஸ்.கணேசன், மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.அசோக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் குமரன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்.கே.பேட்டை வடக்கு ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சியில் ``ஓரணியில் தமிழ்நாடு’’ உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று ஒன்றிய செயலாளர் சி.எம்.சண்முகம் தலைமையில் நடந்தது. இதில், அம்மையார்குப்பம் திமுக கிளை நிர்வாகிகள் மணி, கோவிந்தசாமி, தியாகராஜன், ஏகவள்ளி பழனி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி எஸ்.ஆர்.செங்குட்டுவன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சி.எம்.சண்முகம், திமுக நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று, புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். இதில், திமுக நிர்வாகிகள் சண்முகம், திருநாவுக்கரசு, அம்பேத்கர், மோகநாதன், கிருஷ்ணன், விநாயகம், கிருபானந்தன், கிருஷ்ணமூர்த்தி, வேலாயுதம், ஜெயராமன், விஸ்வநாதன், சுந்தரம், கிரி, வேலு, சதாசிவம், பரஞ்ஜோதி, ராமலிங்கம், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related News