வார்பட்டு ஊராட்சியில் திமுக சார்பில் விடியல் விருந்து
பொன்னமராவதி, ஜூன் 28: பொன்னமராவதி அருகே வார்பட்டு ஊராட்சியில் திமுக.வின் விடியல் விருந்தினை 25வது நாளாக அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். திருமயம் சட்டமன்ற தொகுதி சார்பில் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழாவை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் உள்ள 101 ஊராட்சிகளில் 101 நாட்களுக்கு விடியல் விருந்து அளிக்கப்படுகிறது. அதில், 25வது நாளாக நேற்று பொன்னமராவதி அடுத்த வார்பட்டு ஊராட்சி பொதுமக்களுக்கு அமைச்சர் ரகுபதி உணவு வழங்கினார்.
இதில், மாநில மருத்துவரணி துணைச்செயலாளர் அண்ணாமலை, பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிராஜ், நகரச்செயலாளர் அழகப்பன், இதில் நிர்வாகிகள் பழனிச்சாமி, சிக்கந்தர், இளையராஜா,மணிஅண்ணாத்துரை, தட்சணாமூர்த்தி, சாமிநாதன், ஆலவயல் முரளிசுப்பையா, முத்தையா, சீமாட்டி லத்திப், சுந்தரிராமையா, சுரேஷ்பாண்டி, நாகராஜன், தேனூர் சின்னையா செல்வம், பாரதிராஜா, வினோத், நாராயணன், தங்கராசு லோகநாதன், அஞ்சைகாத்தான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.