தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வேண்டும் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக மருத்துவர் அணியின் இலவச மருத்துவ முகாம்

 

Advertisement

நாகப்பட்டினம், செப்.2:முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் நாகப்பட்டினத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் முகுந்தன் வரவேற்றார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். நகர் மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாநில மருத்துவ அணி செயலாளர் எழிலன், துணை செயலாளர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் பல் சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, கண் சிகிச்சை, இதயம் சிகிச்சை, இஜிசி, ரத்த அழுத்தம் ஆகிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மாநில மருத்துவர் அணி செயலாளர் எழிலன் பேசியதாவது: சமூக இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் இது போன்ற முகாம்கள் நடத்தும்.

அரசியல் கட்சிகள் பேரணி, மக்கள் விழிப்புணர்வு நடத்தப்படும். ஆனால் திமுக மட்டும் தான் மக்கள் இயக்கத்துடன் மருத்துவ முகாம்களை நடத்தும். மறைந்த முதல்வர் அண்ணா மக்களை தேடி செல் என்று கூறினார். இதை நமது முதல்வர் செய்து வருகிறார். 2002ல் வரும் முன் காப்போம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்படி மக்களுக்கான திட்டங்களை செய்த அரசு திமுக. அந்த வழியை பின்பற்றி நமது முதல்வர் மருத்துவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறார். இந்த ஆட்சி மக்களுக்கானது. மக்கள் உரிமை கேட்கும் ஆட்சி. எனவே இந்த திராவிட மாடல் அரசை பலப்படுத்த தொடர்ந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் லோகநாதன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அண்ணாதுரை, திமுக நகர துணை செயலாளர்கள் திலகர், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Advertisement

Related News